கோப்புப்படம் 
இந்தியா

கோட்சேவை புகழ்ந்து ட்விட்டரில் பதிவுகள்; கொதித்தெழுந்த வருண் காந்தி

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று 'கோட்சே வாழ்க' என்ற  வாசகம் ட்ரெண்ட் ஆன நிலையில், மக்களவை உறுப்பினர் வருண் காந்தி இக்கருத்துகளை தெரிவித்துள்ளார்.

DIN

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று 'கோட்சே வாழ்க' என்ற  வாசகம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதை கடுமையாக விமரிசித்துள்ள பாஜக மக்களவை உறுப்பினர் வருண் காந்தி, கோட்சவை புகழ்வது நாட்டை அவமதிக்கும் செயல் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா எப்போதுமே ஒரு ஆன்மீக வல்லரசாக இருந்து வருகிறது, ஆனால் அண்ணல்தான் நமது தேசத்தின் ஆன்மீக அடித்தளங்களை தனது ஆளுமையின் மூலம் வெளிப்படுத்தினார். எங்களுக்கு ஒரு தார்மீக அதிகாரத்தை அளித்தார்.

'கோட்சே ஜிந்தாபாத்' என்று ட்வீட் செய்தவர்கள் பொறுப்பற்ற முறையில் தேசத்தை அவமானப்படுத்துகிறார்கள்" என பதிவிட்டுள்ளார். கடந்த 1948ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி, கோட்சே காந்தியடிகளை சுட்டு கொன்றார்.

அகிம்சையின் சின்னமாக விளங்கிய காந்தியடிகளை படுகொலை செய்த கோட்சேவை வலதுசாரி சிந்தனையாளர்கள் சிலர் புகழ்வது வழக்கமான ஒன்றாகவிட்டது. குறிப்பாக, அண்ணலின் பிறந்தநாளன்று சிலர் இப்படி செய்வது பெரும் விமரிசனத்திற்குள்ளாகிவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT