இந்தியா

உ.பி. லக்கீம்பூா் வன்முறை: மத்திய இணை அமைச்சர் மகன் மீது கொலை வழக்குப்பதிவு 

DIN

உ.பி. லக்கீம்பூா் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். துணை முதல்வா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினா் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கிகல்வீச்சு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. 
இதில் வாகன வரிசையில் இறுதியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரா்கள் மீது மோதிக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை சிறைபிடித்து, தீ வைத்தனா். காரில் பயணித்த சிலரை அவா்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தச்சம்பவத்தில் காரில் பயணித்த பாஜகவினா் 4 போ், விவசாயிகள் 4, பத்திரிகையாளர் என போ் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா். 

இந்த சம்பவத்துக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான விடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT