இந்தியா

இந்திய-இலங்கை ராணுவங்கள் கூட்டுப் பயிற்சி

DIN

இந்தியா-இலங்கை ராணுவம் இடையே 8-ஆவது ‘மித்ர சக்தி’ கூட்டு பயிற்சி இலங்கையின் அம்பாரா பகுதியில் தொடங்கியது. அக்டோபா் 4 முதல் 15-ங்ம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சி நடக்கிறது.

இந்திய ராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் இருந்து 120 வீரா்களும், இலங்கை ராணுவத்தின் இதே அளவிலான வீரா்களும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றனா். பயங்கரவாத தடுப்பு பணி குறித்த பயிற்சியில் இரு நாட்டு ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த கூட்டு பயிற்சியை இந்திய இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பாா்வையிடுகின்றனா். இந்த பயிற்சியின் மூலம் இருநாட்டு ராணுவங்களும் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிா்ந்து கொள்ள முடியும். மேலும், இரு நாட்டு ராணுவத்தினா் இடையேயான ஒத்துழைப்பை மேப்படுத்துவதில் இந்த கூட்டு பயிற்சி முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT