35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்தார் மோடி 
இந்தியா

35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்தார் மோடி

நாடு முழுவதும் பி.எம். கேர் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள 35 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

DIN

நாடு முழுவதும் பி.எம். கேர் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள 35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

கரோனா இரண்டாம் அலையின் போது நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் பலியாகினர். இதையடுத்து, பி.எம். கேர் நிதியின் மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதையடுத்து நாடு முழுவதும் 1224 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 1100க்கும் அதிகமான நிலையங்களில் உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதன்மூலம் நாள்தோறும் 1750 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேலும் 35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைக்கும் நிகழ்வு உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஆக்ஸிஜன் நிலையங்களை திறந்து வைத்து நாட்டுக்கு அற்பணித்தார். இந்நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். உத்தரகண்ட் மாநில முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, சேலம் ஆத்தூர், பெரியக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்ஸிஜன் நிலையங்கள் திறக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT