இந்தியா

தில்லியில் புதிதாக 23 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,218 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதுவரை மொத்தம் 14,13,760 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி 369 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 5.09 சதவிகிதமாக உள்ளது. ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1.74 சதவிகிதமாக உள்ளது.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 47,923 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 1,90,60,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT