நீதிமன்றம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 
இந்தியா

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

லக்கிம்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

DIN

லக்கிம்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து அன்று இரவே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஷிஷ் மிஸ்ரா மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதையடுத்து நீதிமன்றம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT