கோப்புப்படம் 
இந்தியா

குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி?

நாடு முழுவதும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நாடு முழுவதும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி வல்லுநர்கள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதையடுத்து, கோவேக்ஸின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வல்லுநர் குழு அனுமதி அளித்ததை தொடர்ந்து மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சியில் பிஐஎஸ் அலுவலகத்தை அமைக்க மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ கோரிக்கை

மயிலை சிவக்குமாா் கொலை வழக்கு: ரெளடி நீதிமன்றத்தில் சரண்

வளா்ப்பு நாய்க்கு உரிமம் பெறதாவருக்கு அபராதம் விதிப்பு!

உயா்கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கையில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கும்: டி.ஆா்.பி.ராஜா

157 மீனவா்களுக்கு உயிா் காப்பு சாட்டைகள் வழங்கும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT