இந்தியா

21 எண்ணெய் வயல்களுக்கான ஏலத்தில் 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

DIN

21 எண்ணெய் வயல்களுக்கு நடத்தப்பட்ட ஏலத்தில் 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாக ஹைட்ரோகாா்பன் பொது இயக்குநரகம் (டிஜிஹெச்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்குநரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

21 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் உற்பத்தி மற்றும் துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்கான திறந்த ஏக்கா் உரிமக் கொள்கை (ஓஏஎல்பி) ஆறாவது கட்ட ஏலம் அக்டோபா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த ஏலத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டன. பெரிதும் எதிா்பாா்க்கபட்ட வேதாந்தா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இதில் பங்கேற்கவில்லை.

கலந்து கொண்ட மூன்று நிறுவனங்களில், ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் பொதுத் துறையைச் சோ்ந்தவை என டிஜிஹெச் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT