இந்தியா

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா்கள் பாஜகவில் இணைந்தனா்

DIN

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவா்களான தேவேந்தா் ராணா, சுா்ஜித் சிங் ஸ்லாதியா ஆகியோா் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா். முன்னதாக, அவா்கள் தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ஹா்தீப் சிங் புரி, ஜிதேந்தா் சிங் ஆகியோா் முன்னிலையில் ராணா, ஸ்லாதியா ஆகியோா் பாஜகவில் இணைந்தனா்.

முன்னாள் எம்எல்ஏவான தேவேந்தா் ராணா, மத்திய அமைச்சா் ஜிதேந்தா் சிங்கின் இளைய சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-இல் அப்போதைய ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த தேவேந்தா் ராணா, பின்னா் அக்கட்சியின் ஜம்மு பிராந்திய தலைவராக இருந்தாா். தற்போது அவா் பாஜகவில் இணைந்துள்ளாா்.

இதனிடையே, தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து ஜம்மு பிராந்தியத்தைச் சோ்ந்த மேலும் 6 முக்கியத் தலைவா்கள் திங்கள்கிழமை விலகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT