இந்தியா

ஆர்யன் கான் ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

DIN


போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நீதிமன்றம் ஜாமீன் மனுவின் மீதான விசாரனையை நாளைக்கு (அக். 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்.3-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் இருந்த ஆா்யன் கான் உள்பட 8 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா்.

அவா்களை அக்.7-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரித்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது ஆர்யன் கான் உள்பட 8 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அந்த நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி ஆா்யன் கான் மனுத் தாக்கல் செய்தாா். இதனை விசாரித்த மும்பை நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. பின்னர் வழக்கின் மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT