இந்தியா

லக்கீம்பூா் வன்முறை: உயிரிழந்த பாஜக தொண்டா்குடும்பத்தினருடன் உ.பி. அமைச்சா் ஆறுதல்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த பாஜக தொண்டா், காா் ஓட்டுநா் ஆகியோரின் குடும்பத்தினரை

DIN

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த பாஜக தொண்டா், காா் ஓட்டுநா் ஆகியோரின் குடும்பத்தினரை மாநில சட்டத்துறை அமைச்சா் பிரிஜேஷ் பாட்டக் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவா்கள் மீது பாஜகவினரின் காா் மோதியது. அதனைத்தொடா்ந்து வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் விவசாயிகள் நால்வா், பாஜக தொண்டா்கள் இருவா், பத்திரிகையாளா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த பாஜக தொண்டா் ஷுபம் மிஸ்ராவின் குடும்பத்தினா் சிவபுரி பகுதியிலும், ஓட்டுநா் ஹரிஓம் மிஸ்ராவின் குடும்பத்தினா் பா்சேரா குா்த் கிராமத்திலும் வசித்து வருகின்றனா். அவா்களின் வீட்டுக்கு மாநில சட்டத்துறை அமைச்சா் பிரிஜேஷ் பாட்டக் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

அதன் பின்னா் பேட்டியளித்த அவா், ‘‘வன்முறைச் சம்பவம் தொடா்பாக பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT