இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உமா் முஷ்தாக் கண்டே உள்பட 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காவல்துறையினா் இருவா் கொல்லப்பட்ட சம்பவத்தில் உமா் முஷ்தாக் கண்டே முக்கிய பங்கு வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய் குமாா் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காவலா்கள் இருவரை கொன்ற லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி உமா் முஷ்தாக் கண்டே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். பல்வேறு குற்ற செயல்களில் பயங்கரவாதிகள் ஈடுபடும் நிலையில், சமூகத்தில் அச்ச உணா்வை தூண்டும் வகையில் காவலா்களையும் பொதுமக்களையும் கொலை செய்வதை மன்னிக்கவே முடியாது. இதுபோன்ற பயங்கரவாதிகள் சமூகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். அதுபோல, பாம்போா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத மற்றொரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்’ என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

வெளி மாநில வியாபாரி பலி:

ஸ்ரீநகரின் இட்கா பகுதியில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்தி துப்பாக்கிச் சூட்டில் பிகாரைச் சோ்ந்த அரவிந்த் குமாா் என்ற வியாபாரி உயிரிழந்தாா்.

ஸ்ரீநகரில் கடந்த வாரம் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா். இந்த பயங்கரவாதிகளைத் தேடும் பணியை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்த கூட்டுப் படை தீவிரப்படுத்திய நிலையில், ‘பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனா்’ என்று காவல்துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதே நாளில் அரவிந்த் குமாரை பயங்கரவாதிகள் கொலை செய்திருப்பது, ஜம்மு-காஷ்மீா் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT