புவனேஸ்வரம்: பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும், கோபால்பூர் எம்எல்ஏவுமான பிரதீப் குமார் வீட்டிலிருந்து 1,440 கிராம் தங்கம், ரூ.24.25 லட்சம் மதிப்புள்ள ஆரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், பிரதீப் குமார் வீட்டிலிருந்து 1,440 கிராம் தங்கம், ரூ.24.25 லட்சம் மதிப்புள்ள ஆரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில் எண்ணற்ற சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.5 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அக்டோபர் 4ஆம் தேதி லோகாயுக்தா வழிகாட்டுதலின்படி, லஞ்ச ஒழிப்புத் துறைனிர் வழக்குப் பதிவு செய்து, அவருக்குத் தொடர்புடைய 15 இடங்களில் 17ஆம் தேதி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.