உ.பி: பாஜக எம்எல்ஏ-விற்கு 5 ஆண்டுகள் சிறை 
இந்தியா

உ.பி: பாஜக எம்எல்ஏ-விற்கு 5 ஆண்டுகள் சிறை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திரா பிரதாப் திவாரி போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம்

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திரா பிரதாப் திவாரி போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

அயோத்யாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி எம்எல்ஏ-வான இந்திரா பிரதாப் திவாரி கடந்த 1990 ஆம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி அயோத்யாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இதனை 1992 -ஆம் ஆண்டு கண்டுபிடித்த அக்கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி திவாரியின் மீது வழக்குத் தொடுத்தார்.

பின் 28 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று (அக்-18)  சிறப்பு நீதிபதி பூஜா சிங் , எம்எல்ஏ திவாரியின் குற்றம் நிருபிக்கப்பட்டதாகக் கூறி ரூ.8000 அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாக அறிவித்தார்.

மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த கல்லூரியின் முதல்வர் திருப்பாதி வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே இறந்ததால் வழக்கு சாட்சியாக கல்லூரித் தலைவர் மஹேந்திர குமார் அகர்வால் இருந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT