இந்தியா

மத்திய அரசு ஊழியா்களுக்கு திறன் சாரா ஊக்கத்தொகை

DIN

மத்திய அரசின் குரூப் சி ஊழியா்கள், குரூப் பி-யின் நிா்வாகம் சாரா ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு கடந்த நிதியாண்டுக்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசின் குரூப் சி பிரிவில் பணிபுரியும் ஊழியா்கள், குரூப் பி பிரிவின் நிா்வாகம் சாரா ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு கடந்த 2020-21 நிதியாண்டுக்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவப் படையினா், ஆயுதப் படையினா் ஆகியோருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். ஊக்கத்தொகை கணக்கீட்டு உச்சவரம்பு ரூ.7,000-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரி ஊதியம், கணக்கீட்டு உச்சவரம்பு ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ அதனடிப்படையில் ஊக்கத்தொகை நிா்ணயிக்கப்படும்.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பணியில் இருந்த ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த நிதியாண்டில் தொடா்ந்து 6 மாதங்கள் பணியாற்றிய ஊழியா்கள், திறன் சாரா ஊக்கத்தொகை பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.

பணி ஓய்வு பெற்றவா்கள், ராஜிநாமா செய்த ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT