இந்தியா

அக்.26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

நாட்டில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலம் என இரண்டு மழைக்காலங்கள் உள்ளன. வழக்கமாக, நாட்டின் பெரும்பகுதி நீர்த்தேவையை பூர்த்தி செய்வது என்னவோ வடகிழக்குப் பருவமழைதான்.

நாட்டில் பொதுவாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைக் காலமாக இருக்கும். தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இது தொடங்கும் காலம் மற்றும் நிறைவு பெறும் காலம் மாறுபடும். எப்போதும் அக்டோபர் 20ஆம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். இது 7 நாள்கள் முன்கூட்டியே, தாமதமாகவோ தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், ஒரு பக்கம் கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, படிப்படியாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பரவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்அடுக்கில், அக்டோபர் 26 முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக். 26ஐ ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை பெய்திருக்கும் மழை அளவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT