கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இருசக்கர வாகனம்- லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

மகாராஷ்டிரத்தில் லாரி, இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். 

DIN

மகாராஷ்டிரத்தில் லாரி, இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். 

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தின் விரார் பகுதியில் சாலையில் வந்துகொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. 

இருசக்கர வாகனத்தில் பயணித்த யோகேஷ் மாதவி (32), அவரது தாயார் சுனிதா (60) , அவரது 9 வயது மகள் வேதா ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மூவரும் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

விபத்து ஏற்பட்டதை அடுத்து, தண்ணீர் டேங்கர் லாரியின் டிரைவர் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர்களே மலரட்டும்... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!

குடியரசு துணைத் தலைவராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்! தேர்தலில் வெற்றி! செய்திகள்: சில வரிகளில் |9.9.25

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்!

பாஜகவுக்கு தார்மீக தோல்வி; சித்தாந்தப் போர் தொடர்கிறது - காங்கிரஸ்

கணவரை அறிமுகப்படுத்தினார் கிரேஸ் ஆண்டனி..! யார் இந்த அபி டாம் சிரியாக்?

SCROLL FOR NEXT