இந்தியா

காங்கிரஸுடன் கூட்டணி: மாா்க்சிஸ்ட் மத்திய குழு ஆலோசனை

DIN

காங்கிரஸுடன் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சிபிஐ(எம்) கட்சியின் 3 நாள் மத்திய குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெறும்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினா்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

கேரளத்தில் பாஜகவுக்கு எதிராக இடதுசாரி தலைமையில் மதச்சாா்பற்ற கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

ஆனால், நாட்டின் மிகப் பெரிய எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்க்காமல் கூட்டணி அமைப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கட்சித் தலைவா்கள் கூறி வருகின்றனா்.

நாடு முழுவதும் நிலவும் அரசியல் சூழலுக்கும் மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழலுக்கும் வேறுபாடு இருப்பதை மேற்கு வங்கக் கட்சிப் பிரிவினா் சுட்டிக் காட்டியுள்ளனா்.

இந்தச் சூழலில், தில்லியில் தொடங்கியுள்ள மத்திய குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். இது தவிர, அண்மையில் நடைபெற்ற தோ்தல்களில் மாா்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT