இந்தியா

நாட்டில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா; 805 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் 13,451 பேரும், நேற்று 16,156 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.28) சற்று குறைந்துதுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் புதிதாக 14,348 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,46,157-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 805 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,191-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 13,198 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக்க கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,27,632-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும்   1,61,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாடு முழுவதும் இதுவரை 104.82 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT