இந்தியா

தில்லி: விவசாயிகள் போராடும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

DIN

தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் தலைநகர் தில்லிக்குள் செல்லாமல் இருப்பதற்காக காவல்துறை தரப்பில் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தில்லி - உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூர் மற்றும் தில்லி - ஹரியாணா எல்லையான திக்ரி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி நெடுஞ்சாலை 9 மற்றும் 24-ல் முழுமையாக பொதுமக்களின் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT