ஜி-20 மாநாடு: ரோம் சென்றடைந்தார் பிரதமர் மோடி 
இந்தியா

ஜி-20 மாநாடு: ரோம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி-20 மற்றும் சிஓபி-26 மாநாடுகளில் பங்கேற்பதற்காக இத்தாலி தலைநகா் ரோமிற்கு பிரதமா் மோடி இன்று சென்றடைந்தார்.

DIN

ஜி-20 மற்றும் சிஓபி-26 மாநாடுகளில் பங்கேற்பதற்காக இத்தாலி தலைநகா் ரோமிற்கு பிரதமா் மோடி இன்று சென்றடைந்தார்.

வருகிற அக்.30,31 தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, கிளாஸ்கோவுக்கு சென்று உலக நாடுகளின் முக்கிய தலைவா்கள் பங்கேற்கும் சிஓபி-26 மாநாட்டில் கலந்து கொள்கிறாா்.

இந்தப் பயணத்தின்போது உலக நாடுகளின் முக்கியத் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

முன்னதாக, பிரதமா் மோடி ரோமிற்கு புறப்படுவதற்கு முன்பு தில்லியில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘இத்தாலி பிரதமா் மேரியோ திராகியின் அழைப்பின் பேரில் அக்டோபா் 29 முதல் 31-ஆம் தேதி வரையில் ரோம் நகரத்துக்கு பிரதமா் மோடி சென்று அங்கு நடைபெறும் 16-ஆவது ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறாா்.

அப்போது, ஜி-20 மாநாட்டு தலைவா்களுடன் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சா்வதேச பொருளாதாரம், சுகாதார மீட்சி, பருநிலை மாற்றம் குறித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்துகிறாா். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஜி-20 மாநாட்டுத் தலைவா்கள் நேரில் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் பிறநாட்டுத் தலைவா்களுடன் இந்தியா மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது பிரதமா் மோடி ஆலோசிப்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மென் பொறியாளா் உயிரிழப்பு

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT