இந்தியா

'மன்னித்து விடுதலை செய்யுங்கள்'.. காஷ்மீர் மாணவர்களின் குடும்பத்தினர்

DIN

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் மாணவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவர்களது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக தங்களது வாட்ஸ்ஆப் செயலியில் பாராட்டு தெரிவித்த காஷ்மீர் மாணவர்களை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தது.

ஆக்ராவில் உள்ள ஜாக்தீஸ்பூர் காவல்நிலையத்தில் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஆக்ராவில் உள்ள ராஜா பல்வந்த் சிங் கல்லூரியில், பிரதமரின் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயின்று வரும் ஷௌகத் அகமது, அர்ஷத் யூசுஃப், இனயத் அல்டாஃப் ஆகிய மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்களது பெற்றோர் கூறுகையில், எங்களது பிள்ளைகள் கைது செய்யப்பட்டு ஆக்ரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்களது பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அவர்களது சார்பாக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்களது எதிர்காலம் பாழகிவிடும் என்று உத்தரப்பிரதேச அரசை வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT