முகப்பு
இந்தியா

உ.பி.யில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆட்சி மாற்றம் இருக்காது: மத்திய அமைச்சர்

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆட்சி மாற்றம் இருக்காது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆட்சி மாற்றம் இருக்காது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

லக்னெளவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், வருகின்ற தேர்தலில் 403 இடங்களில் 400 இடங்களில் வெல்வோம் என்றார்.

இதுகுறித்து விமரிசித்து மத்திய அமைச்சர் முக்தார் கூறியது:

Advertisement

“உத்தரப்பிரதேசம் தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என அகிலேஷ் யாதவ் கூறியது கற்பனையே. இதுபோன்ற தவறான புரிதல், அரசியல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு உ.பி.யிலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் நடக்காது.” 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து வார்த்தைப்போர் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments