மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 4,130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,310 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,82,117ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 64 பேர் பலியானார்கள்.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 1502 பேருக்கு கரோனா தொற்று
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,37,707ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 50,466 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 5,506 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,88,851ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.