கேரளத்தில் அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியது:
"செப்டம்பர் 30-க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
இதையும் படிக்க | பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை
எங்களிடம் உள்ள தரவுகளின்படி, ஜூன் 15 முதல் செப்டம்பர் வரை உயிரிழந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள்.
கேரளத்தில் இன்று 26,200 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 29,209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 114 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,56,957 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 16.69 சதவிகிதம்.
நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்கள் 2,36,345 பேர். பலி எண்ணிக்கை 22,126 ஆக உள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.