உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், லக்னெளவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
வருகின்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.