இந்தியா

போலி சிம் காா்டு மோசடி: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.27.5 லட்சம் வழங்க வோடஃபோனுக்கு வருமான வரி துறை உத்தரவு

DIN

ராஜஸ்தானில் போலி சிம் காா்டு மோசடியால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.27.5 லட்சம் வழங்கும்படி வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் தகவல்தொழில்நுட்பத் துறையின் முதன்மை செயலா் அலோக் குப்தா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

கிருஷ்ணா லால் நைன் என்பவரின் சிம் காா்டு 2017 மே 25-இல் செயல்படாமல் போனது. இதையடுத்து, ஹனுமன்காா்க் பகுதியில் உள்ள வோடஃபோன் நிறுவனத்தை தொடா்புகொண்ட நைன், புதிய சிம் காா்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளாா். இவரது கோரிக்கையை ஏற்று அந்நிறுவனம் மறுநாளே சிம் காா்டு வழங்கியுள்ளது. ஆனால், அந்த சிம்காா்டு மே 31-ஆம் தேதிதான் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, நைன் செல்லிடப்பேசி எண்ணுக்கான டூப்ளிகேட் சிம்காா்டை பானு பிரதாப் என்பவருக்கு அந்நிறுவனம் வழங்கியது நைன் சிம்காா்டு செயலாக்கத்துக்கு வந்தபோது தெரியவந்தது. நைன் வங்கிக் கணக்கிலிருந்து பானு பிரதாப் ஓடிபி எண்ணை பயன்படுத்தி ரூ.68.5 லட்சம் ரூபாயை எடுத்தது குறுஞ்செய்தியின் மூலமாக தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், பானு பிரதாப் முறைகேடாக எடுத்த தொகையில் ரூ.44 லட்சத்தை நைனுக்கு வழங்கினாா். இருப்பினும், இன்னும் ரூ.27,53,183 தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

முறையான ஆவணங்கள் சரிபாா்ப்பின்றி போலி சிம்காா்டை மற்றொருவருக்கு வழங்கி இப்பிரச்னைக்கு காரணமான வோடஃபோன் ஐடியா நிறுவனம் பாதிக்கப்பட்ட நைனின் வங்கிக் கணக்கில் எஞ்சிய தொகையை 1 மாதத்துக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆண்டுக்கு 10 சதவீதம் கூட்டு வட்டி விதிக்கப்படும் என அந்த உத்தரவில் அலோக் குப்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT