இந்தியா

தேசிய லோக் அதாலத்: 15 லட்சம் வழக்குகளுக்குத் தீா்வு

DIN

நாடு தழுவிய அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏற்கெனவே ஏப்ரல், ஜூலை மாதங்களில் இருமுறை தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இந்நிலையில் அது மூன்றாவது முறையாக சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசிய லோக் அதாலத் நேரடியாகவும் காணொலி வழியாகவும் நடத்தப்பட்டது. இதில் சனிக்கிழமை மாலை 4 மணி வரை 33,12,389 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 15,33,186 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு மொத்தம் ரூ.2,281 கோடி இழப்பீடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. பெரும்பாலும் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், திருமண விவகாரங்கள், காசோலை மோசடி, தொழிலாளா் விவகாரங்கள் விசாரிக்கப்பட்டன.

மகாராஷ்டிரம், ஒடிஸா, கா்நாடகம், கோவா மாநிலங்களில் கரோனா தொற்று காரணமாக தேசிய லோக் அதாலத் நடைபெறவில்லை. அந்த மாநிலங்களில் இம்மாதம் வெவ்வேறு தேதிகளில் அதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இந்த ஆண்டு டிசம்பா் மாதம் அடுத்த தேசிய லோக் அதாலத் நடைபெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT