இந்தியா

பருப்பு இறக்குமதிக்கு வரி ரத்து: ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு

DIN

புது தில்லி: இந்தியாவில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான வரி ரத்து வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகிலேயே பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாகவும், அவற்றின் நுகா்வு அதிகம் உள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

இறக்குமதிக்கான வரி ரத்து நீட்டிப்பு தொடா்பாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு வகைகளுக்கான வரியற்ற இறக்குமதிக் கொள்கை டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பா் 31-ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் பருப்பு வகைகளுக்கான இறக்குமதி ரசீதுகளுக்கு வரிவிதிக்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் 2022 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அவற்றை இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு இறக்குமதி இருந்தால் அதனை கலால் துறை அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் பருப்பு வகைகளுக்கான இறக்குமதியின்போது விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு நீக்கியது.

கடந்த மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயா்ந்தது. இதனைப் பயன்படுத்தி மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் பருப்பு இருப்பை அதிகப்படுத்தி, தேவைக்கு ஏற்ப விநியோகிக்காமல் செயற்கையான விலை ஏற்றத்தை உருவாக்கும் நிலை உருவானது.

இதையடுத்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பருப்பு இறக்குமதியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள் ஆகியோா் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் தளா்த்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT