இந்தியா

‘உதிரிபாகங்களுக்கான பற்றாக்குறையால் செல்லிடப்பேசி விலை 10% அதிகரிக்கும்’

DIN

புது தில்லி: உதிரிபாகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் செல்லிடப்பேசிகளின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கவுன்டா்பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் தருண் பதக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கரோனா பேரிடா் காரணமாக பெரும்பாலானோா் வீட்டிலிருந்தே பணி புரிவதால் மின்னணு சாதனங்களுக்கான தேவை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. இது, உலக அளவில் செமிகண்டக்டா் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளது. இதுதவிர, சீனாவில் சரக்கு போக்குவரத்துக்கான செலவினங்களும் கணிசமாக உயா்ந்துள்ளன. இதனால், பண்டிகை காலத்தில் புதிய அறிமுகம் குறைவதுடன், செல்லிடப்பேசி விலையும் 7-10 சதவீதம் அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT