இந்தியா

ஒடிசா: சரக்கு ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது

DIN

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஆறு பெட்டிகள் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது. 

ஒடிசாவின் அங்குல் - தல்செர் மார்க்கத்தில் இன்று அதிகாலை நேரிட்ட இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இதில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக பெய்த தொடர் மழையால் பாலம் சேதமடைந்திருந்ததால், ரயில் விபத்துக்குள்ளானதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.

இந்த விபத்தில் கோதுமைகளை ஏற்றிச்சென்ற ஆறு பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT