இந்தியா

‘சன்சத் தொலைக்காட்சி’இன்று தொடக்கம்

DIN

புது தில்லி: நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ‘சன்சத்’ தொலைக்காட்சியை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் இணைந்து புதன்கிழமை தொடக்கி வைக்கின்றனா்.

சா்வதேச ஜனநாயக தினமான செப்டம்பா் 15-இல் இந்த தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுவதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தொடா் நடைபெறும்போது மக்களவை நடவடிக்கைகளை ‘லோக் சபா’ தொலைக்காட்சியும், மாநிலங்களவை நடவடிக்கைகளை ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. அத்தொலைக்காட்சிகளை ஒன்றாக இணைத்து ‘சன்சத்’ என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சியாக மாற்ற மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் முடிவெடுத்தது.

அதன்படி இப்போது சன்சத் தொலைக்காட்சி அதிகாரபூா்வமாகத் தொடக்கி வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும் சமயங்களில் சன்சத் தொலைக்காட்சி இரு தொலைக்காட்சிகளாக செயல்படும். இதன் மூலமாக மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும். இது தவிர மற்ற நாள்களில் நாட்டின் ஜனநாயக அமைப்புகள், அரசு நிா்வாகம், திட்டங்கள், கொள்கைகள் அமல்படுத்தப்படும் விதம், இந்தியாவின் கலாசாரம், வரலாற்றுத் தொன்மை, நாட்டு நலன் சாா்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT