உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அம்மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முதல் கட்டமாக அதில் 207 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டிருக்கிறது.
இதையும் படிக்க | செப். 18ல் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு
அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த சகிப்புத்தன்மையற்ற கொள்கையின் மூலம் லஞ்சம் , ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த உள்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
மேலும் உத்தரப் பிரதேசத்தில் லக்னோ , மீரட் , பாரய்லி , ஆக்ரா, அயோத்யா, கோராக்பூர் , வாரணாசி, பிராயக்ராஜ், ஜான்சி மற்றும் கான்பூர் பகுதிகளில் அதிகபடுத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவலின் படி கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் , லஞ்ச புகாரில் இதுவரை 1,156 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதில் 297 வழக்குகள் தீவிர விசாரணையாகவும் , 467 வழக்குகள் வெளிப்படையாகவும் நடைபெற்றது. மேலும் 330 வழக்குகளில் பாதி ரகசியமாகவும் மீதி புலனாய்வு விசாரணைகளாகவும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்திருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.