இந்தியா

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

DIN

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து காந்திநகரில் உள்ள நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கட்ச் மாவட்டம் துதை நகருக்கு 26 கி.மீ. வடகிழக்கே, 9.3 கி.மீ. ஆழத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.1 அலகுகளாகப் பதிவானது என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று கட்ச் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்தது.

நில அதிா்வு அபாயப் பகுதியான கட்ச், ஆமதாபாதுக்கு 300 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியில் மிதமான நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 21-ஆம் தேதி இந்தப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். கடந்த 2 நூற்றாண்டு அளவில் இந்தியாவில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT