இந்தியா

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு கட்டணம் இல்லை:சிபிஎஸ்இ

DIN

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த மாணவா்கள் அடுத்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை எழுதினால், அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று நாட்டை மிகவும் பாதித்துள்ளது. அது மாணவா்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்கள் கரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்தவா்களாக இருந்தால் அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம்.

பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்கும் போது கரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்த மாணவா்களின் தகவல்களையும் பள்ளிகள் ஆராய்ந்து வழங்கும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT