கோப்புப்படம் 
இந்தியா

கோவிலுக்குள் நுழைந்த தலித் சிறுவன்: பெற்றோருக்கு ரூ.35,000 அபராதம் விதித்த கிராமம்

கர்நாடகத்தில் கோவிலுக்குள் பிராத்தனை செய்ய தலித் சிறுவன் நுழைந்ததால், பெற்றோருக்கு ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கர்நாடகத்தில் கோவிலுக்குள் பிராத்தனை செய்ய தலித் சிறுவன் நுழைந்ததால், பெற்றோருக்கு ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பல் மாவட்டத்திலுள்ள மியாபுரா கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலித் சமூகத்தினர் கோவிலுக்கு வெளியே தான் நின்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு ஹனுமான் கோவிலுக்குச் சென்ற 4 வயது சிறுவன், கோவிலுக்குள் ஓடியுள்ளான்.

இதைக் கண்ட கோவில் அர்ச்சகர் மற்றும் கிராமத்தின் உயர்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் செப்டம்பர் 11ஆம் கிராமக் கூட்டத்தை கூட்டி சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதமும், கோவிலை சுத்தம் செய்ய ரூ. 10,000 என மொத்தம் ரூ. 35,000 கேட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை செப்டம்பர் 21ஆம் தேதி அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர், அந்த கிராமத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி பேச்சு வார்த்தையை மேற்கொண்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT