முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,608 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பதிவான பாதிப்புகளைக் காட்டிலும் 477 பாதிப்புகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,31,237 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,285 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 63,49,029 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 48 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,38,664 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 39,984 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.