இந்தியா

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம்: மத்திய அரசு தகவல்

DIN


கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக அரசு தெரிவித்துள்ளது:

"கரோனா மீட்புப் பணிகள் அல்லது பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தயாராகும் செயல்பாடுகளில் ஈடுபட்டு நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி இறப்புக்கான காரணம் கரோனா என்று குறிப்பிட்டுள்ளவர்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்படும். மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்கள் நிவாரண உதவிகளை வழங்கும்."

முன்னதாக, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அதிருப்தியைத் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT