இந்தியா

ஜார்க்கண்ட் நீதிபதி மரண வழக்கில் திருப்பம்: தகவல்களை வெளியிட்ட சிபிஐ

DIN

கடந்த ஜூலை மாதம், ஜார்க்கண்ட் மாவட்ட நீதிபதி நடைபயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஆட்டோ ரிக்ஷா மோதியதில் அவர் மரணமடைந்தார். வாகனம் அவர் மீது உள்நோக்கத்துடன் மோதியதாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது சிபிஐ தெரிவித்துள்ளது.

சிசிடிவி, தடயவியல் ஆதாரங்கள், முப்பரிமாண ஆய்வு உள்ளிட்டவற்றை விசாரணைக்குட்படுத்தியதில் நீதிபதி உத்தம் ஆனந்த் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன. குற்றச் சம்பவத்தின் மாதிரி மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதில் இது கொலை என்பது உறுதியாகியுள்ளது.

குஜராத் காந்திநகர், தில்லி, மும்பை உள்ளிட்ட நான்கு இடங்களிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் ஆராயப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. வழக்கின் விசாரணையை முடிப்பதற்காக மற்ற ஆதாரங்களுடன் தடயவியல் ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுவருகிறது.

பொய் கண்டறிதல், போதை பொருள் பகுப்பாய்வு என குஜராத்தை சேர்ந்த இரண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் பல்வேறு விதமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கொலையின் பின்னணியில் உள்ள சதிச் செயல்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிமன்றத்தில் 8-ஆவது மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணிபுரிந்தவா் உத்தம் ஆனந்த் (49). அவா் தன்பாதில் கடந்த புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

அவா் நடைப்பயிற்சி சென்றபோது, பின்புறமிருந்து வாகனமொன்று அவா் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் தெளிவாக காட்டின. அதையடுத்து, நீதிபதி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பதர்திஹ் காவல் நிலைய பொறுப்பாளர் உமேஷ் மாஞ்சி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நீதிபதியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை காணவில்லை என ஜூலை 30ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து எஸ்எஸ்பி சஞ்சீவ் குமார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது,

அதுமட்டுமின்றி, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட இருவர் பதர்திஹ் காவல் நிலைய எல்லையை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றம் கவலை தெரிவித்ததோடு, இதுதொடா்பான விசாரணையை மாநில காவல்துறை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க ஜார்க்கண்ட் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT