முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 16,671 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 16,671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் புதிதாக 16,671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,671 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,26,201 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 120 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,438 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,65,154 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 14,242 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 44,23,772ஆக உயர்ந்துள்ளது இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →