முகப்பு
இந்தியா

வெளிநாடு செல்வோரின் கோவின் சான்றிதழ்களில் பிறந்த தேதி

வெளிநாடு செல்வோரின் கோவின் சான்றிதழ்களில் பிறந்த தேதியையும் குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

வெளிநாடு செல்வோரின் கோவின் சான்றிதழ்களில் பிறந்த தேதியையும் குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது பயனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு வழங்கப்படும் கோவின் சான்றிதழ்களில் அவா்களின் விவரங்களுடன் வயது மட்டும் குறிப்பிடப்படுகிறது. பிறந்த தேதி குறிப்பிடப்படுவதில்லை. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல விரும்புவோா் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டிருந்தால் அவா்களின் பிறந்த தேதியையும் கோவின் சான்றிதழ்களில் முழுமையாக குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்கி இந்தப் புதிய அம்சம் சோ்க்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இது செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.