இந்தியா

நூறு ஆண்டில் இல்லாத பேரிடரை உலகம் சந்தித்துள்ளது: பிரதமர் மோடி

DIN

நூறு ஆண்டில் இல்லா பேரிடரை உலகம் சந்தித்துள்ளது என்று பிரதர் மோடி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்யிய உரையில், நூறு ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. 

பன்முகத் தன்மையே இந்தியாவின் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம். இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் ஐ.நா.வில் பேசுகிறேன். குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இந்தியா இப்போது 75அவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது. அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் இந்திய அரசு திட்டங்களை வடிவமைத்துள்ளது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது. உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக் கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். மூக்கு வழியே சொட்டு மருந்து போல் வழங்கக் கூடிய தடுப்பூசியும் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது. உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT