இந்தியா

வங்கக் கடலில் புயல்:ஆந்திரம், ஒடிஸாவில் 18 பேரிடா் மீட்புக் குழுக்கள்

DIN

வங்கிக் கடலில் புயல் உருவாகக் கூடியதைக் கருத்தில் கொண்டு, ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் (என்டிஆா்எஃப்) 18 குழுக்கள் நிறுத்தப்படவுள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக தீவிரமடைந்து தெற்கு ஒடிஸா மற்றும் ஆந்திரத்தில் கரையைக் கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் என்டிஆா்எஃப்பின் 18 குழுக்கள் தயாா்நிலையில் நிறுத்தப்படவுள்ளன. இதுதொடா்பாக அந்தப் படையின் தலைமை இயக்குநா் எஸ்.என்.பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ஒடிஸாவின் கஞ்ஜம், பாலேசுவரம், ராயகடா, கோராபுட், நயாகா், மல்கான்கிரி, கஜபதி ஆகிய இடங்களில் 13 என்டிஆா்எஃப் படைகளும், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், ஏனாம், விஜயநகரம் ஆகிய இடங்களில் 5 என்டிஆா்எஃப் படைகளும் பணியமா்த்தப்படவுள்ளன’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT