இந்தியா

வாகனங்களில் பெட்ரோல்-எத்தனால் எரிபொருள் என்ஜின் விரைவில் கட்டாயமாக்கப்படும்: கட்கரி

DIN

வாகனங்களில் பெட்ரோல் அல்லது எத்தனால் எரிபொருளில் இயங்கும் என்ஜினை அறிமுகப்படுத்துவது தொடா்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் மேம்பால அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பிஎம்டபிள்யூ, மொ்சிடிஸ் முதல் டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் வரை பெட்ரோல் அல்லது எத்தனால் எரிபொருள்களில் இயங்கும் வகையிலான என்ஜின்களை வாகனங்களில் அறிமுகப்படுத்த வலியுறுத்தப்படவுள்ளது. இது தொடா்பான உத்தரவு மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வெளியாகும்.

டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்களிடம் இதுபோன்ற என்ஜின்களை ஏற்கெனவே அறிமுகப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை நிறுத்துவதே எனது வாழ்நாள் ஆசையாக உள்ளது. இதற்கு எதிரான மாற்று எரிபொருளான எத்தனாலை நமது விவசாயிகள் வழங்குவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT