இந்தியா

கேரளத்தில் புதிதாக 15,951 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 15,951 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"கடந்த 24 மணி நேரத்தில் 1,03,484 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதிதாக 15,951 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 70 பேர். 15,191 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 617 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

165 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 24,603 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 17,658 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 44,41,430 பேர் குணமடைந்துள்ளனர். 

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,63,280 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 12.1 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT