முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 11,699 பேருக்கு கரோனா; 58 பேர் பலி

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,699 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் மட்டும் 58 பேர் பலியாகியுள்ளனர்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கேரளத்தில் புதிதாக 11,699 பேருக்கு கரோனா; 58 பேர் பலி
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,699 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் மட்டும் 58 பேர் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேரளத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 11,699 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,661-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,763 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 44,59,193-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →