இந்தியா

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை அக்-31 வரை நீட்டிப்பு

DIN

இந்தியாவில் கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை  அக்- 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.  

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வரும் அக்-31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிட்ட சில மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT