கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து; மேஜர் தயான்சந்த்-ஐ நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்தியாகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து; மேஜர் தயான்சந்த்-ஐ நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நாளை கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் அவதரித்த நாள். கிருஷ்ண ஜெயந்திக்குக்கு உங்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்நாளில் தேசத்தின் சிறந்த பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு நாட்டு மக்களை வலியுறுத்துகிறேன். இந்திய ஆன்மீகம் மற்றும் தத்துவ முறைகளுக்கு உலக நாடுகள் மரியாதை செலுத்துகின்றன.
இன்று மேஜர் தயான்சந்தின் பிறந்தநாள். அவருடைய நினைவை போற்றும் வகையில் இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
41 ஆண்டுகள் கழித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிக்கு உயிரூட்டி இருக்கின்றனர் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணி.
இன்றைய இளைஞர்களின் மனங்கள் பழமைவாதமான வழிமுறைகளை விட்டு விலகி புதிய ஒன்றை சாதிக்க விரும்புகின்றன.
இந்திய பொம்மை சந்தையை உலகளவில் விரிவுபடுத்துவதை இளைஞர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். பொம்மை தயாரிப்பில் செயல்முறைகள், பல்வேறு, தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிய விஷயங்களை பரிசோதிப்பதில் இளைஞர்கள் இன்று கவனம் செலுத்துகின்றனர்.
இதில் கல்லூரி, பல்கலைக்கழங்கள், பரிசோதனைக் கூடங்களில் பணியாற்றும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தோடு விண்வெளித்துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளனர்.
இன்றைய இளைஞர்கள், விளையாட்டுக்களை ரசிக்க மட்டுமே செய்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் அவற்றோடு தொடர்புடைய அனைத்தையும் கவனிக்கின்றனர். அதன் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும், மிக நுணுக்கமாகப் பார்க்கிறார்கள். அவற்றின் வல்லமையைப் புரிந்து கொள்கிறார்கள் என்றார்.