நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29-ல் தொடக்கம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. நாட்டில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வந்ததன் காரணமாக பட்ஜெட் மற்றும் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | பெகாஸஸ் விவகாரத்தை நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கக் கோரி வழக்கு: நாளை தீர்ப்பு
Advertisement
Advertisement
இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.