முகப்பு
இந்தியா

இலங்கைக்கு 40,000 டன் டீசல் அனுப்பும் இந்தியா

இலங்கைக்கு உதவும் வகையில், 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா அனுப்புவதாக சிலோன் பெட்ரோலியம் கழகத்தின் நிர்வாகி சுமித் விஜேசிங்கே கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
இலங்கைக்கு 40,000 டன் டீசல் அனுப்பும் இந்தியா
பகிர்:


பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா அனுப்புவதாக சிலோன் பெட்ரோலியம் கழகத்தின் நிர்வாகி சுமித் விஜேசிங்கே கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக டீசல் விநியோகத்தை நிறுத்தி வைத்திருந்த பல எரிபொருள் வழங்கு நிலையங்களுக்கு இந்த தகவல் நிம்மதியை ஏற்படுத்துவதாகவும், இந்தியா வழங்கும் டீசல் கிடைக்கப்பெற்றவுடன் இன்று மாலையே டீசல் விநியோகம்தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இலங்கையில் மக்களின் உணவுத் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 40 ஆயிரம் டன் அரிசியையும் இந்தியா அனுப்பி வைக்கவிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியா தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டபிறகு, மிகப்பெரிய அளவில் இன்று நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட அரிசியின் விலை சற்றுக் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா மேலும் ரூ.7,500 கோடி கடனுதவி
நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக, பாரத ஸ்டேட் வங்கி மூலமாக இந்திய அரசு ரூ.7,500 கோடி (100 கோடி டாலா்) கடனுதவி வழங்கியிருந்தது.

இதற்கான ஒப்பந்தம் தில்லியில் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்தவாரம் கையொப்பமானது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், இந்தியா வந்துள்ள இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச, தில்லியில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக இலங்கைக்கு ரூ.7,500 கோடி (100 கோடி டாலா்) கடனுதவி வழங்குவதற்காக, இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி, இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, எரிபொருள்கள் வாங்குவதற்காக, இலங்கை அரசுக்கு இந்தியாவின் எக்ஸிம் வங்கி கடந்த மாதம் ரூ.3,700 கோடி (50 கோடி டாலா்) கடனுதவி வழங்கியது.

இந்த நிலையில், மேலும் ரூ.7500 கோடி கடனுதவி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →